Saturday, August 20, 2016

அறந்தாங்கி நைனா முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பழங்கால நாணயங்கள் மற்றும் அஞ்சல் தலை கண்காட்சி 16,17 ஆகஸ்ட் 2016


அறந்தாங்கி நைனா முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16,17/08/2016 செவ்வாய் புதன் ஆகிய தினங்களில் நடைபெற்றது.
இக்கண்காட்சிக்கு கல்லூரியின் நிறுவனர் N.முகமது பாருக் அவர்கள் தலைமையேற்றார், முதல்வர் K. கமர்ஜஹான் அனைவரையும் வரவேற்றார், கல்லூரியின் அறங்காவலர்கள் P. நைனா முகமது NS. நைனா முகமது K. நைனா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை நாணயவியல் கழக நிறுவனர் மற்றும் தலைவர் எஸ்.டி. பசீர் அலி அவர்கள் இக்கண்காட்சியை துவக்கி வைத்து மாணவர்களிடம் இந்திய திருநாட்டின் கலாச்சரம், பண்பாடு குறித்து சொற்பொழிவாற்றினார். மேலும் மாணவர்களிடம் வினாடி வினா கேள்விகள் கேட்டு பரிசுகளை வழங்கினார்.
 இக்கண்காட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு தபால்தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டது. சங்கு, வண்ணத்து பூச்சி, பறவைகள், ஊர்வன, அழிந்துபோன விலங்குகள், தற்கால விலங்குகள் என 125 நாடுகளின் தபால்தலைகள் காட்சிபடுத்தப்பட்டது.
நாணயங்களில் சேரர், சோழ, பாண்டியர் நாணயங்களும், கேரள காவடி நாணயங்களும், திருவாங்கூர் சமஸ்தான நாணயங்கள், குப்த நாணயங்கள், ஜெய்பூர் நாணயங்கள், மராட்டிய மன்னர்களின் நாணயங்கள், மதுரை நாயக்கர்களின் நாணயங்கள், ஐதராபாத் நிஜாம் நாணயங்கள், திப்பு சுல்தான் நாணயங்கள், ஈஸ்ட் இந்தியன் கம்பெனி, பிரிட்டிஸ் ராஜ்ஜிய நாணயங்கள், வெள்ளி, பித்தளை, வெங்கல நாணயங்கள் சுதந்திரத்திற்க்குப்பின் இந்திய தலை சிறந்த தலைவர்கள், முன்னால் பயன்பாட்டில் இருந்த அலுமினிய நாணயங்கள் மற்றும் உலக நாடுகளின் நாணயங்கள் வரை கண்காட்சியில் இடம் பெற்றது.
பணத்தாள்கள்
150 நாடுகளின் பணத்தாள்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாட்டின் பணத்தாள்களும் அந்தந்த நாட்டின் வரைபட விளக்கத்துடன் காட்சிபடுத்தப்பட்டு இருந்ததால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இறுதியில் கல்லூரியின் நிர்வாக அலுவலர் மாரிச்சாமி நன்றி கூறினார்.

இக்கண்காட்சியை நைனா முகமது கல்வியியல் கல்லூரி மாணவர்களும், கிரசண்ட் மேல்நிலை பள்ளி மாணவர்களும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் கண்டுகளித்து விழிப்புணர்வு பெற்றனர்.சேமிப்பு பழக்கங்கள் கடைபிடிக்க தன்முனைப்பு காட்டினர். புதுக்கோட்டை நாணயவியல் கழகத்தை சார்ந்த வழக்கறிஞர் திரவியம், பெரியசாமி, அபுதாகிர் மற்றும் ஏறாலமானோர் கலந்துகொண்டனர்.


 

  

 

No comments:

Post a Comment