Wednesday, March 30, 2016

காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா 24 & 25/03/2016






           புதுக்கோட்டை மாவட்டம்,  திருவரங்குளம் ஒன்றியம் , காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி உமாதேவி முன்னிலை வகித்தார்.  தலைமை ஆசிரியை செந்தில்வடிவு வரவேற்புரை ஆற்றினார். பட்டதாரி ஆசிரியர் திரு. சின்னத்துரை ஆண்டறிக்கை வாசித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு காசிம்புதுப்பேட்டை ஜமாஅத் தலைவர் திரு. எஸ். டி. பஷீர் அலி பரிசுகளை வழங்கினார். ஆண்டுவிழாவின் சிறப்பு நிகழ்வாக கவிஞர். நா. முத்துநிலவன் ”குழந்தைகள்! குழந்தைகளே !!” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். ஆத்மா ஆட்சி மன்ற உறுப்பினர் திரு. காமராசு “இயற்க்கயை காப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர் பள்ளியின் ஒருவருட செயல்பாடுகள் மற்றும் சிறப்புகள் பற்றிய காணொலியுடன் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் அரசுப்பள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வில்லுப்பாடலை மாணவர்கள் பாடி அனைவரையும் கவர்ந்தனர். இந்த பாடலை பாடிய மாணவர்களை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் உள்ளிட்ட விருந்தினர்கள் பாராட்டினர். விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை செந்தில்வடிவு, பட்டதாரி ஆசிரியர்கள் சின்னத்துரை, இளங்கோ, தியாகு, இடைநிலை ஆசிரியைகள் திருமங்கை, சத்யபூரணி, சத்யா ஆகியோர் செய்திருந்தனர். விழாவின் முடிவில் பட்டதாரி ஆசிரியர் தியாகு நன்றி கூறினார்.





விளையாட்டு விழா