Friday, November 20, 2015

மாமன்னர் திப்பு சுல்தான் மத ஒற்றுமையின் சின்னம்!


 நவம்பர், 20 திப்பு சுல்தான் பிறந்த தினம்
மாமன்னர் திப்பு சுல்தான் மத ஒற்றுமையின் சின்னம்! 
 மைசூர் புலி என்று பிரிட்டிஷார் அஞ்சிய விடுதலைப் போரின் முன்னோடி திப்பு மே 4ம் தேதி சீரங்கப்பட்டிணம் காவேரி நதிக்கரையில் வீரமரணம் ய்தி 200 ஆண்டுக்கு மேலாகின்றது.
     முந்தை எந்த ஆண்டுகளை விடவும், இவ்வாண்டு திப்புவின் நினைவுகளை ஆழமாகவும், அழுத்தமாகவும் நினைவில் கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு எழுந்துள்ளது.




     39 ஆண்டுகளே வாழ்ந்த திப்புவின் வாழ்வும், சாதனைகளும் நமது ஆட்சியாளர்களுக்கு முன்னுதாரணம், நாளை இந்த மண்ணைக் காக்க எழும் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டும் தாரகை.


திப்பு தென்னகத்தில் வெள்ளையரின் ஆட்சி காலூன்றவிடாமல் தடுக்க தன்னுயிரையே களப்பலியாக ஈந்த மாவீரர், இந்து முஸ்லிம் ஒற்றுமையை வளர்த்த உத்தமர். அந்நியரின் பொருளாதார விலங்குகளிலிருந்து இந்திய சுதேசியத்தைக் காத்த முன்னோடி, சகல துறைகளிலும் இந்தியா முன்னிலை வகிக்க உலக நாடுகளுடன் தொடர்பு கொண்டு பல தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்த செயல் வீரர்.
திப்பு காட்டிய மத நல்லினக்க உணர்வும், மத ஒற்றுமைச் செயல்பாடுகளும் நாம் ஒவ்வொருவரும் அறிந்து பின்பற்ற வேண்டியவை.
திப்புவின் ம்பிக்கைக்குரிய முதன்மை அமைச்சராகத் திகழ்ந்தவர் பூர்ணய்யா என்னும் பிராமனரே. திப்புவின் மரணத்திற்கு பின்பும் திப்புவின் வாரிசுகளுக்கு ஆட்சி தரப்படவேண்டும் என வாதிட்டவர்.
நட்பின் இருப்பிடம்
திப்புவின் வாரிசுகளின் கல்லரைகளுக்கிடையே பூர்ணய்யாவின் மகளது கல்லரை நட்பின் அடையாளமாக உள்ளது.

திப்புவை காட்டிக் கொடுத்தது, வெள்ளையருக்கு துணை நின்ற மீர் சாதிக்கின் கல்லரையில் மக்கள் இன்றும் உமிழ்ந்து செல்கின்றனர்.


சீரங்கப்பட்டிணத்தில் திப்புவின் மாளிகைக்கு மிக அண்மையில்   அரங்க நாதர் கோயில் உள்து. தினமும் காலை கோவிலில் பூஜை மணி ஓசை கேட்டபின்பே உணவருந்த செல்லும் வழக்கம் கொண்டிருந்தார் திப்பு.
 


கோயில் இன்னும் சீர் குலையாது சிறப்புடன் திகழ்கிறது. திப்பு தந்த ஏராளமான கொடைப் பொருட்கள் கோட்டையில் உள்ள பல இந்துக் கோவில்களில் இன்றும் காட்சிப் பொருட்களாக சாட்சி சொல்கின்றன.
ஆலயங்களுக்கான மாணியத்தொகையாக திப்பு ஒதுக்கிய 2,33,969 வராகன்களில் 2,13,969 வராகன் இந்துக் கோயில்களுக்கே வழங்கப்பட்ட்தாக ஆவங்கள் கூறுகின்றன.
நஞ்சன் கூடு கோவிலில் பார்வதி அம்மன் சிலையின் இடது புறத்தில் திப்பு வழங்கிய ஒன்பதரை அங்குல உயரம் உள்ள மரகத லிங்கம் பாதுஸா லிங்கம் என்று இன்றும் பூஜிக்கப்பட்டு வருகிறது.
வடகலைதென்கலை
மேலக்கோட்டை நரசிம்மர் கோவில் இந்துக்களின் கும்பவடிவில், பாரசீக மொழி வாழ்த்துடன் திப்பு வழங்கிய முரசு, மத ஒற்றுமையின் குரலை ஒலித்துக் கொண்டு இருக்கிறது.
மேலக்கோட்டை வடகலை தென்கலை மோதலிலும், விஜயமங்கலம், கடகலை, இடகலை மோதலிலும் நடு நிலையுடன் திப்பு வழங்கிய தீர்ப்பை இந்து சமயத்தினர் ஏற்றுக்கொண்டனர்.
திப்பு மலபார்ப் (கேரளம்) பகுதியை வென்றபோது, அச்சம் கொண்ட அர்ச்சகர்கள் குருவாயூரப்பன் சிலையை எடுத்து மறைத்து வைத்தனர், இதையறிந்த திப்பு, மீண்டும் கிருஷ்ணர் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்யச் செய்ததுடன், அப்பகுதியின் வருவாய் முழுமையையும் குருவாயூர் கோவிலுக்கே மாணியமாக வழங்கியதை ஆவணங்கள் நிரூபிக்கின்றன.
திப்பு ஆழ்ந்த மதப்பற்று கொண்ட நல்ல இஸ்லாமியராக இருந்தார். அவர் வெளியிட்ட எந்த நாணயத்திலும் தன் பெயரை பதித்து கொள்ளாதவர், சகல பெருமைக்கும் உரியவர் இறைவன் ஒருவனே என்ற வாசகத்தை நாணயத்தில் பொறித்தார். திப்புவின் ஆட்சிக் காலத்தில் கிடைத்த நாணயங்களில் பார்வதி, பரமசிவன் உருவங்களும், யானை உருவம் பொறித்த நாணயங்களும் அவரது மத ஒற்றுமை உணர்வின் அழியாத சான்றுகளாக்கி வெளிப்படுத்துகின்றன.
ஆட்சியின் மாட்சி
1787ல் திப்பு தனது அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை மத ஒற்றுமையை காக்க விழையும் ஆட்சியாளர் அனைவரும் அறிவேண்டிய வழிகாட்டல்.
பிற மதங்களிடம் சகிப்புத் தன்மையோடு நடப்பதுதான் புனித குர் ஆனின் அடிப்படை. பிற மததினரை நிர்பந்திப்பதோ, அவமதிப்பதோ கூடாது. நமது இறைவனும் அவர்கள் இறைவனும் ஒருவனே. உலக மக்கள் யாவரும் ஒரே இறைவனை வணங்க வேண்டும் என்பது இறைவன் சித்தமானால், மக்களை அப்படியே படைத்திருப்பார் அல்லவா?, இந்துக்களின் புனித வேதங்களையும் வாசித்துவந்தார்.
அவை எத்தனை பெயரில் அழைத்தாலும் இறைவன் ஒருவனே என ஒற்றுமையை வலியுறுத்துகிறது. இறைவனின் சாம்ராஜ்ஜியத்தில் வெறுப்பையும் , பகைமையும் உபதேசிப்பவர்களைக் கண்டு வேதனைப்படுகிறேன். மனிதர்களின் நற்காரியங்களுக்கு ஒருவருக்கொருவர் துணை நிற்போம். ஜாதி, மதம் இவற்றின் பெயரால் வேற்றுமையை வளர்ப்பது சட்டவிரோதமானது என வேற்றுமை வளர்ப்போரை எச்சரித்து ஒற்றுமை வளர்ப்போரை வரவேற்று ஒற்றுமைக்கு வழிகாட்டுகிறது அந்த சுற்றறிக்கை.
இது வெறும் ஏட்டளவிலான கட்டளையாக அன்றி செயல்படும் சட்டமாக இருந்ததை ஒரு நிகழ்ச்சி காட்டுகிறது.
பீர்லாத என்ற இஸ்லாமிய அறிஞர், ஊர்வலம் வந்த இந்துகளிடம் மோதினார். ஒரு இஸ்லாமிய அரசில் இஸ்லாமியர் தாக்கப்படுவது தண்டிக்கப்படவேண்டும் அல்லது தான் நாட்டை விட்டு வெளியேற நேரும் எனப் பீர்லாத எச்சரித்தார். இதனை தீர விசாரித்த திப்பு, இஸ்லாமிய இளைஞர் கேலி செய்ததே மோதலுக்கு காரணம் என அறிந்து. இந்துக்களை தண்டிக்க இயலாது என கூறி. (பீர்லாத) விருப்பம் அதுவானால் அவர் வெளியேறலாம் என உறுதியுடன் கூறினார். இந்த நடுநிலை உணர்வு நமது ஆட்சியாளர்களிடம் நிலவுமாயின் பல கேடுகள் தவிர்க்கப்படும்.
உழுபவனுக்கே நிலம் எனும் நிலச் சீர்திருத்த சட்டம், மலபார் பெண்கள் மார் மீது துணி அணிய வேண்டும் என்ற சட்டம், திருமணச் செலவுகள் வருவாயின் ஒரு சதவீத்திற்குள் இருக்கவேண்டும் எனப் பல சீர்திருத்தங்களை மக்களின் மத உணர்வுகள் புண்படாவண்ணம் அமலாக்க முயன்றார்.
மதுவைக் காய்ச்சுவதோ, விற்பதோ கடுமையான தண்டனைக்குரிய குற்றம் என மது விலக்குச் சட்ட்த்தைக் கொண்டுவந்தார்.
வெள்ளையர்கள் இம்மண்ணில் காலூன்றிவிடக் கூடாது என்பதற்காகவே இந்து, மராட்டிய மன்னர்களுடனும், இஸ்லாமிய நிஜாமுடனும் பலமுறை உடன்பாடு காண முயன்று தோற்றார். அதனாலேயே திப்பு மரணச் செய்தி கேட்ட வெல்லெஸ்லி இனி இந்தியா நமது என எக்காளமிட்டான்.
நன்றி பச்சை ரோஜா, அகஸ்ட் 2013


No comments:

Post a Comment