Monday, January 30, 2017

2017ம் ஆண்டு பொங்கல் விழா

2017ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு மூன்று அரசுப்பள்ளிகள் மற்றும் ஒரு சிறப்புப் பள்ளியின்  மாணவ மாணவிகளுக்கு 260 இலவச வண்ண ஆயத்த ஆடைகள்  வழங்கப்பட்டது.

அரையப்பட்டி
பிள்ளையார்பட்டி
கொன்னையூர்களமாவூர் மலர்ச்சி சிறப்புப் பள்ளி

Wednesday, December 14, 2016

புதுக்கோட்டை புத்தக திருவிழா – 2016 - நிகழ்ச்சியில் தபால் தலை மற்றும் நாணயக் கண்காட்சி


புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்ற புத்தக திருவிழா புதுக்கோட்டை நாணயவியல் கழகம் சார்பாக 30-11-2016 முதல் 04-12-2016 வரை தபால்தலை, பணத்தாள் மற்றும் நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது.


     கண்காட்சியில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கேள்விகள் கேட்கப்பட்டு பதில் சொல்லும் மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக அளிக்கப்பட்டது.

       

Monday, October 10, 2016

68 அரசு பள்ளி மாணவிகளுக்கு வண்ண ஆடைகள் வழங்கும் விழா

அரசு பள்ளி மாணவிகளுக்கு வண்ண ஆடைகள் வழங்கும் விழா

இப்படிப்பட்ட சகோதரர்களால் உலகம் வாழ்கின்றது...
சிலநாட்களுக்கு முன் அன்புடன் ,சகோதரி நல்லாருக்கீங்களா..கொஞ்சம் அலுவலகத்துக்கு வர்றீங்களா..என்று அழைத்த போது கூட இப்படி எதிர்பார்க்கவில்லை..அலுவலகம் நிறைந்த புத்தாடைகளைக்காட்டி உங்கள் பள்ளிக்குழந்தைகளுக்கு தீபாவளிக்காக புதிய ஆடைகள் வழங்க நினைக்கின்றேன்...என்று எவ்ளோ வேணும்னு கேட்ட போது மலைத்தே போனேன்...ஒரு 50 குழந்தைக்கு கொடுக்க முடியுமா அண்ணா என்றேன்..எவ்ளோ வேணுமோ எடுத்துக்குங்கம்மா என்றார்..இன்று 68 குழந்தைகளுக்கு ரூ 50,000 மதிப்புள்ள ஆடைகளை மாணவிகளுக்கு மனம் நிறைய வழங்கி மகிழ்ந்தார்.
இவ்விழாவில் சிறப்புவிருந்தினராக கவிஞர் முத்துநிலவன் அண்ணாவும் கலந்து கொண்டதைக்காண கண் கோடி வேண்டும்..நன்றி அண்ணாஸ்..
புதுக்கோட்டை ஐக்கிய நல கூட்டமைப்பின் சார்பில் இன்று [6.10.16] மாலை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு வண்ணஆடைகள் வழங்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
கவிஞரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கவிஞர்கள் சங்கத்தின் மாநில உறுப்பினரான திருமிகு முத்துநிலவன் அவர்களும் திருமிகு ஏ.ஆர்.எம் அப்துல்லாஹ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பள்ளியின் உதவித்தலைமையாசிரியர் திருமிகு இரவி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
தலைமையாசிரியர் திருமிகு கோ.அமுதா அவர்கள் சிறப்பு விருந்தினர்களை கௌரவித்து தலைமையுரை ஆற்றினார்.
புதுக்கோட்டை ஐக்கியநல கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு பஷீர் அலி அவர்கள்..மாணவர்களுக்கு சேவை செய்வதன் அவசியத்தைக்கூறி மேலும் பல உதவிகள் செய்ய காத்திருப்பதாகக் கூறிய பொழுது மாணவிகள் கரவொலியால் தங்களது மகிழ்வைத் தெரிவித்தனர்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திருமிகு ஏ.ஆர்.எம்.அப்துல்லாஹ் அவர்கள் தங்களது சகோதரிகள் இப்பள்ளியின் முன்னால் மாணவிகள் என்றும் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு வேண்டிய உதவிகளை செய்து தருவதாகக்கூறியது அனைவர் மனதையும் நெகிழ வைத்தது.
கவிஞர் முத்துநிலவன் அவர்கள். மாணவிகளுக்கு புதிய வண்ண ஆடைகளை வழங்கிய போது அவர்கள் அடைந்த மகிழ்விற்கு அளவே இல்லை. மேலும் அவர் தனது சிறப்புரையில் பாடம் படிப்பது மட்டும் கல்வியல்ல..அடிப்படையில் வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொள்ளும் அனைத்துமே அறிவாகும்...பெண்கள் எதற்கும் துணிவுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற வேண்டும்.சமூக சூழ்நிலை உங்கள் கல்விக்கு இடையூறு தந்தாலும் கல்வியில் முன்னேறி வெற்றி பெறுவதே வாழ்வின் இலட்சியமாகும் ..மதிப்பெண்கள் மட்டும் கல்வியில்லை...நல்ல ஒழுக்கத்துடன் வாழ்வதும் முக்கியமான ஒன்றாகும் என மாணவிகள் மகிழும் படி சிறப்பானதொரு உரையாற்றினார்.
தமிழாசிரியர் கிருஷ்ணவேணி அவர்கள் அனைவருக்கும் கவிதை நடையில் நன்றி பாராட்டி நன்றியுரை கூறினார்.
முதுகலைத்தமிழாசிரியர் திருமிகு பரமசிவம் அவர்கள் விழாவை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
பள்ளிக்கு மேலும் பல உதவிகளை செய்து தருவதாகக்கூறி திருமிகு பஷீர் அலி அவர்கள் கூறிய போது இவர்களைப்போன்ற கொடையாளிகளால் அரசுப்பள்ளிகள் வளம் பெறுகின்றது என பள்ளியின் ஆசிரியர்கள் கூறி மகிழ்ந்தனர்.


Monday, September 19, 2016

பெரியார் பிறந்தநாளில் வண்ண ஆடைகள் வழங்கும் விழா
புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளியில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அங்கு பயிலும் மாணவிகள் அனைவருக்கும் புதிய ஆயத்த ஆடைகள் புதுக்கோட்டை ஐக்கிய நல கூட்டமைப்பின் சார்பாக வழங்கப்பட்டது.
விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சிவசக்திவேல் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் மீனாட்சிசுந்தரம் அனைவரையும் வரவேற்றார். புதுக்கோட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பழனியப்பன், கவிஞர் கீதா, புதுகை செல்வா, கவிஞர்.மீரா செல்வகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஐக்கிய நல கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். டி.சீர் அலி  66 மாணவிகளுக்கு ஆயத்த ஆடைகளை வழங்கி வாழ்த்துரை வழங்கும்போது முயற்சி உடையோருக்கே எல்லாம் கிடைக்கும் என்பதை அழகாக எடுத்துக்காட்ட, நூறு ரூபாய் பணத்தைக்காட்டி இது யாருக்கு வேண்டும் என கேட்டார். மாணவர்கள் தயங்க, பின் அவர்களை ஊக்கமூட்டி உடனே முன்வந்த மாணவிக்கு சட்டென்று உனக்குதான் இந்த பணம் என்ன செய்ய போகிறாய் என்று பசீர் அலி அவர்கள் கேட்க இதை நான் உண்டியலில் சேர்த்து வைப்பேன் ன்று அந்த மாணவி கூறி வியப்பூட்டினார். நிறைவாக பள்ளியின் ஆசிரியர் பேச்சியம்மாள் நன்றியுரை வழங்கினார். ஐக்கிய நலக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் K நூருல்லாஹ், மொய்தீன், பள்ளி ஆசிரியர்கள் அன்புக்கிளி, சுபா, ராமதிலகம், நிர்மலா, பவுலின் ஜெயராணி பள்ளி மேலாண்மை குழு தலைவர் சாமுண்டீஸ்வரி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் பள்ளியும் புதிய தலைமுறை நிறுவனமும் இணைந்து நடத்திய வீட்டுக்கொரு விஞ்ஞானி நிகழ்ச்சியில் தபால் தலை மற்றும் நாணயக் கண்காட்சி

அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் பள்ளியும் புதிய தலைமுறை நிறுவனமும் இணைந்து நடத்திய வீட்டுக்கொரு விஞ்ஞானி நிகழ்ச்சியில் தபால் தலை மற்றும் நாணயக் கண்காட்சி

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை நாணயவியல் கழகம் சார்பாக தபால்தலை, பணத்தாள் மற்றும் நாணயங்கள் கண்காட்சி கழகத்தின் நிறுவனரும் தலைவருமான எஸ்.டி. பசீர் அலி உடைய சேமிப்புகளை காட்சிபடுத்தப்பட்டிருந்தது. கண்காட்சியை பள்ளியின் தாளாளர், முதல்வர் சுரேஷ் துவக்கிவைத்தார். இக்கண்காட்சியை செலக்சன் பள்ளியின் மாணவர்களும், சுற்றியுள்ள கிராமங்களின் அரசுப் பள்ளி மாணவர்களும் மெட்ரிக் பள்ளி மாணவர்களும் பார்த்து பயனடைந்தார்கள்.
கண்காட்சியில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கேள்விகள் கேட்கப்பட்டு பதில் சொல்லும் மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நாணயவியல் கழகத்தை சேர்ந்த அறந்தாங்கி வழக்கறிஞர்  திரவியம், மொய்தீன் மற்றும் அபுதாகிர் கலந்துகொண்டார்கள்